டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் எந்தவொரு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை எம்.எஸ்.எம்.இ (MSME) வியாபாரிகள், சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பேடிஎம்மின் இந்த சேவையை இந்த நிதியாண்டிற்குள் 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கடன் சேவையை வழங்கி வரும் பேடிஎம், பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுடன் சேர்ந்து இரண்டு நிமிடங்களுக்குள் கடன் பெற உதவுகின்றது. […]
