புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் இன்று காலமானார். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். அந்த வகையில் மத்திய அரசு புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தது. இதில் தற்போது சங்கர்(70) மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன […]
