மத்திய அரசின் தவறான ஆட்சி முறையை கண்டித்து வரும் 28-ஆம் தேதி வரை காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபடுவார்கள் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள காந்தி சிலை முன்பு எம்பி விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரச்சார பேரணியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தவறான அணுகுமுறையால், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதாக சாடினார். […]
