நாடாளுமன்றத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் இழப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுனிஷ் சவுகான் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனங்கள் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெகு தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு கூட தொலைத்தொடர்பு சேவையை கொண்டு சேர்க்கிறது. […]
