மாணவர்களை வயிற்று பசியுடன் இருக்கும்போது அறிவு பசியை வளர்த்துக் கொள்ள அவர்களை அறிவுறுத்துவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த காமராஜர் தமது ஆட்சி காலத்தில் பள்ளி மாணவர்கள் சத்துணவு திட்டத்தை தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். காமராஜர் கொண்டு வந்த மதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டமாக எம்ஜிஆர் மெருகேற்றினார். பள்ளி மாணவர்களின் பசியாற்ற காமராஜர், எம்ஜிஆர் செயல்படுத்தி வந்த சிறப்பான திட்டத்தை தன் பங்குக்கு முட்டை மற்றும் வாழைப்பழத்தையும் சேர்த்து புண்ணியம் தேடிக்கொண்டார் கருணாநிதி. […]
