முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவு இடத்தில் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்களும் கூட்டமாக சென்று எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதாவது “அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். இதையடுத்து குறுக்கு வழியில் கட்சியை அபகரிக்கும் முயற்சியை நிறுத்துவோம்” என்று ஓபிஎஸ் தலைமையில் அவர்கள் உறுதிமொழி […]
