தீவிர வாகன சோதனையின்போது எம்சாண்ட் கடத்திய ஓட்டுநரை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் அருகே மணக்காவிளை பகுதியில் மதுரை மண்டல பறக்கும் படை அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த டெம்போவை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டெம்போ ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். உடனே அதிகாரிகள் டெம்போ ஓட்டுநரை துரத்தி சென்று வசமாக பிடித்தனர். அதன்பின் அதிகாரிகள் டெம்போவில் […]
