அரசு பள்ளிகளில் எமிஸ் பதிவு முறை தொடர்பான கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி, பதிவு, ஜாதி, பாலின விகிதம், தனிப்பட்ட தரவு, தேர்வுகள், உடல்நலம் போன்ற தரவுகளையும் ஆன்லைனில் பதிவு செய்ய ‘எமிஸ்’ என்னும் டிஜிட்டல் பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால்’எமிஸ்’ பதிவின்போது ஏற்படும் சர்வர் பிரச்சினை, நெட்வொர்க் கோளாறால் […]
