புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். மின்வாரிய அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது “பருவமலையின் போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து, சீரான மின்விநியோகம் […]
