கார் மீது இருசக்கர வாகனம் மோதி என்ஜீனியர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சேலம் மாவட்டம் மல்லூர் நடேசன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜீனியரிங் படித்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வேலை காரணமாக நாமக்கல்லுக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சேலத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாளம்பகுதி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து இவரது இருசக்கர வாகனம் முன்பு […]
