கடலூர் மாவட்டம் தேவனாம் பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று காலை ரோந்துபணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சில்வர் பீச் கடற்கரை அருகில் 5 பேர் கொண்ட கும்பல் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் வேப்பூர் மாணவி ஸ்ரீமதி கனியாமூர் சக்தி மெட்ரிக்பள்ளியில் இறந்தது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போன்று, கடலூர் மாவட்டத்திலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசினர். இதனை கேட்ட காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் 4 […]
