இன்ஜினியர் வீட்டில் உலோக சிலை, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூர் அருகில் வடகடம்பகுடி அக்ரஹாரம் தெருவில் கட்டிட என்ஜினீயரான அசோகன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி தனது பெற்றோரின் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு பின் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை […]
