பெரம்பலூர் அருகே என்ஜினீயர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசியலூரில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்த்தியாசன் என்ற மகன் உள்ளார். இவர் என்ஜினீயரிங் பட்டதாரி. இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் வசித்து வரும் முத்து ராஜேந்திரன் என்பவரது மகன் சுபாஷும் அமிர்த்தியாசனும் பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு அதன் பின் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே மோட்டார் […]
