என்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் செயலாளர் டி.புருஷோத்தமன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி தான் வெளியிடப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு தொடர்புடைய அட்டவணை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. என்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 மாணவர்களுக்கு 4 சுற்று கலந்தாய்வு நடத்த வேண்டி உள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நாட்கள் தேவைப்படுகிறது. அதன்படி […]
