பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் மும்பையில் நடிகையின் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் மர்மங்கள் நிறைந்த பின்னணியில் மரணமடைந்தது தொடர்பாக அவரது தோழி நடிகை ரியா சக்கரபோர்த்தி மீது மத்திய புலனாய்வுத்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, என்சிபி ஆகியன தனித்தனியே […]
