ஈரோடு மாநகராட்சியில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது குப்பை பிரச்சனையாகும். 60 வார்டுகளில் இந்த பிரச்சனை இருக்கிறது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும், மழைக்காலத்தில் கழிவுகள் சாக்கடையை அடைத்து பிரச்சினை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. அதனை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி நிர்வாக சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தாலும் வீதிகளின் ஓரத்திலும் குடியிருப்புகளை ஒட்டிய காலிடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக […]
