சமீபத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அதிமுகவில் சிலர் ஓ பன்னீர் செல்வத்தின் கருத்தை ஆதரித்தாலும், பல எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை அவருக்கு நினைவு படுத்துகிறேன் எனவும், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் […]
