லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஆர்பாட்டக்கார்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிராக Hyde Park அருகில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதில் பல காவல்துறையினர் காயம் அடைந்திருக்கின்றனர். இணையதளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் காவல் அதிகாரி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிகிறது. […]
