தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம். புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் தற்போதுவரை வழக்கத்தைவிட 56% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]
