தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதுவும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு […]
