சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஆற்றல் துறை அமைச்சகமானது, தலைநகர் ரியாத்தில் இருக்கும் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனினும், நல்லவேளையாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும் சவுதி அரேபியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் ஆற்றல் விநியோக பாதுகாப்பு மற்றும் அதன் ஸ்திரத்தன்மையை கெடுக்கும் நோக்கத்தோடு இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.
