கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக ராஜ மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ஆவர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 13-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக […]
