அமர்நாத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இந்த வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் மாயமாகியுள்ளனர். சம்பவத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . […]
