செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு அம்மாவுடைய அரசு சரியான வடிகால் வசதி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார், உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கிறார், பொய்யான செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கிறார். சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல ஆவடி, பூந்தமல்லி பகுதியில் கூவம் நதி […]
