அசாம் மாநிலத்தில் ஒரு மருத்துவமனையில் 5.2 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அசாம் மாநிலம் சச்சர் என்ற மாவட்டத்தை சேர்ந்த பட்டல் தாஸ் என்பவரின் மனைவி ஜெயா. இவர் இரண்டாவதாக கர்ப்பம் தரித்தார். ஜெயாவிற்கு பிரசவ தேதி மே 29 ஆகும். ஆனால் கொரோனா காரணமாக ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்து வந்துள்ளனர். பின்னர் வேறு வழியின்றி மே 15ஆம் தேதி சத்ந்திரா மோகன் மருத்துவமனைக்கு ஜெயாவை அழைத்துச் சென்றுள்ளனர். […]
