செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் இன்னொரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், அவரை எங்கள் கட்சியில் வருவாரா ? என்று கேட்பது, அவமதிப்பது போல் இருக்கிறது. நாங்கள் அம்மாவுடைய கொள்கைகளை, லட்சியங்களை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இங்கே வாங்க வாங்க என்று யாரிடமும் பேரம் பேசவில்லை, விலை கொடுத்து வாங்குக்கின்ற கட்சி கிடையாது. சின்னமா அதிமுகவை மீட்க சட்டப்படி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக பொதுக்குழு சமயத்தில் அதுக்கு முன்னாடி […]
