நாளை மறுநாள் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் உரையாற்றிய அவர், கொரோனா காலத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார் அந்த வகையில் சென்னையில் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கின்ற மக்களுக்கும், குடிசை பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கும் விலையில்லாமல் முகக்கவசம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நாள்தோறும் 500, 600 வரை காய்ச்சல் முகாம் […]
