கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “திமுக அரசால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவந்தால் 30 முதல் 40 ரூபாய் வரையில் விலையானது குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்யாமல் இருப்பதற்காகவே திமுகவானது ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவராமல் சதித் திட்டத்தை தீட்டி வருகிறது. இதனாலேயே எடப்பாடி பழனிச்சாமி […]
