அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு […]
