அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள். பழனி மலை முருகன், எதிர்க்கட்சியாக இருக்கின்ற நாங்கள், அவருடைய பார்வையிலே இன்றைக்கு மக்கள் வெள்ளம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. எனவே இறைவனே எங்களுக்கு இவ்வளவு அருளை கொடுத்திருக்கின்றான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த எத்தனையோ அவதாரத்தை மேற்கொண்டுள்ளீர்கள், எந்த அவதாரமும் நிறைவேறாது. […]
