உலகிலேயே எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கபட்ட பெண் குணமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பெண் ஒருவர் எச்.ஐ.வி நோயால் பதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார். இதுகுறித்து ஆய்வாளர்கள் எச்.ஐ.வி தொடர்பான ஆய்வில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு நியூயார்க்கை சேர்ந்த 64 வயதுள்ள பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் நோய்க்கான மருந்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். […]
