பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் ஆழியாறு அணை, காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் தற்போது 118 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் கடந்த நான்கு நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. நேற்று […]
