கடலூர் மாவட்டம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 4 சிறுமிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆழமான ஆற்றுப்பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே தேவையான எச்சரிக்கை பலகைகளையும், தடுப்புகளையும் வைக்கப்படுவதை உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பெற்றோர்கள் கண்காணிப்பில் சிறார்கள் குளிக்க வேண்டும். வாழ வேண்டிய இளந்தளிர்கள் […]
