காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 எனும் இலக்கினை எட்ட அரசு மேற்கொண்டு வருகிற பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரால் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட 23 நடமாடும் வாகனங்கள் துவங்கி வைக்கப்பட்டன. இதில் ரூபாய் 46 லட்சம் மதிப்பீட்டிலான டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் தர்மபுரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனம் வாயிலாக காசநோய் கண்டறியும் சேவையை தர்மபுரியில் கலெக்டர் சாந்தி துவங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து கலெக்டர் கூறியிருப்பதாவது “தர்மபுரியில் காசநோய் ஏற்படும் […]
