தொலைதூரக் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை இரண்டாக குறைப்பதற்கு ரயில்வே வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது தொலைதூரக் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 7 சாதாரண படுக்கை வசதி பெட்டிகளும், ஏசி மூன்று டயர் பெட்டிகள் ஆறும், ஏசி இரண்டு டயர் பெட்டிகள் இரண்டும், முன்பதிவில்லா பெட்டிகள் ஐந்தும் இயக்கப்படுகின்றன. இதையடுத்து ரயில்வேயின் புதிய உத்தரவின் படி, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 7-லிருந்து இரண்டாக குறைக்கப்பட்டு ஏசி 3 டயர் பெட்டிகள் 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. […]
