இந்திய நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி எகிப்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நமது இந்திய நாட்டின் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரியான ராஜ்நாத் சிங் 3 நாட்கள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எகிப்து பாதுகாப்பு மந்திரி ஜெனரல் முகமது அகமது ஐகியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையான பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம் மற்றும் அதனை வழிப்படுத்துவதற்கான ஆலோசனைகள் குறித்து பேசினார். இதனைடுத்து இன்று அந்நாட்டு அதிபர் அப்துல் பத்தா அல் சிசியை நேரில் சந்தித்து பேசினார். […]
