எகிப்து நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷோஹாக் மாகாணத்தின் டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு தெற்கு கெய்ரோவில் நடந்த ரயில் விபத்தில் தான் அதிகபட்சமாக 350 பேர் பலியானதாகவும் […]
