மதுபான கடையில் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்நேத்தபாக்கம் கிராமம் அருகில் அரசு மதுபான கடை ஒன்று இருக்கின்றது. இந்நிலையில் அகரம் கிராமத்தில் வசிக்கும் வினோத்குமார், மேல்நெல்லி கிராமத்தில் வசிக்கும் சரவணன் இருவரும் மதுபான கடைக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் பீர் பாட்டில்களை கடனாக தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் ஊழியர் காசு இல்லாமல் மதுபாட்டில்கள் கொடுப்பதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் மதுபான கடை ஊழியரை […]
