வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள் குவித்த அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் என்.ஆர். டி நகரில் முரளிதரன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவரிடம் வருமானத்திற்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் […]
