3 வயது மகன் இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் கார்த்திக் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் 3 வயது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் மகன் உயிரிழந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். […]
