வேலை வழங்கக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று இருக்கிறது. இந்த சுங்கச்சாவடியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதியுடன் சுங்கச்சாவடி குத்தகை ஒப்பந்தம் முடிவடைந்தது, பின் குஜராத்தைச் சேர்ந்த புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பாஸ்டேக் செயல்படுத்தப்பட்டதால் 30 ஊழியர்கள் மட்டும் போதும் என்றும், 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி இல்லை என்றும் திருப்பி […]
