தாயின் கண் முன்னே மகன் ஊருணியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடி பகுதியில் முகமது முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் முகமது நூர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முகமது நூர், தனது தாயாருடன் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஊருணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனின் தாயார் துணி துவைத்து கொண்டிருக்கும் போது ஊருணியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென தண்ணீருக்குள் […]
