திருவாரூர் மாவட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஊராட்சி மன்ற தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்துள்ள நெடுஞ்சேரியில் முருகானந்தம்(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சேரி ஊராட்சி தலைவராக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து கடனை வாங்கிய முருகானந்தம் அதனை திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார். இதனைதொடர்ந்து வங்கி அதிகாரிகள் […]
