குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள மாடகாசம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள் நீண்ட காலமாக கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக குடிநீர் உள்ளிட்ட அடிப்பட வசதிகளும் சரியாக செய்யப்படவில்லை. இந்நிலையில் மாடகாசம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் […]
