மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். கோவை மாவட்டம் பேரூர் அருகில் மத்வராயபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் போதியளவு நிதி இருந்தும் வளர்ச்சி பணியை செய்யாமல் காலத்தை கடத்துகின்றனர். மேலும் முறைப்படி மன்ற கூட்டங்கள் நடத்துவது இல்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் […]
