பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்க்கப்பட்ட அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை 600ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட […]
