ஊரடங்கை அரசு நீடிக்குமா இல்லையா என்பது குறித்து வரும் 30ஆம் தேதி அரசு முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா எண்ணிக்கை குறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனை கூட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நடத்தி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். ஜெனிவாவில் இருந்து உலக சுகாதார அமைப்பின் […]
