காற்றின் தரத்தில் 100 நாட்களில் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டிய ஊராடங்கால், இந்தியாவில் தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றின் இயக்கங்கள் குறைவாகவே காணப்பட்டன. ஆகையால் இவற்றில் இருந்து வெளிவரும் புகையால் காற்றில் மாசுபாடு ஏற்படுவது என்பது குறைந்தது. இதனால் காற்றின் தரம் சிறிதுசிறிதாக உயரத் தொடங்கி 100 நாட்களில் நினைத்துப்பார்க்க முடியாத […]
