Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் மீண்ட துப்புரவு பணியாளர்…. அதன் பிறகு நேர்ந்த துயர சம்பவம் …!!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த துப்புரவு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மாகடி ரோடு காவல்துறை எல்லைக்கு பாத்தியப்பட்ட பகுதியில் 44 வயதுள்ள நபர் ஒருவர், மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய படி அங்கு வசித்து வந்தார். சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து துப்புரவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தலா ரூ.5000 – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட வாரியாக தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களில் ஆய்வு பணியை துவங்கியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் ஆய்வு பணிகளை முடித்து இன்று தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகள் குறித்து பேசிய தமிழக […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஷாக்…. பெற்றோர்கள் வேதனை…. புலம்பவிட்ட கல்வித்துறை …!!

கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மதிப்பெண்  பட்டியல் தயாரித்தல்  உள்ளிட்ட பணிகள் இருப்பதால் தேர்வு கட்டணங்களை மாணவர்கள் செலுத்த வேண்டும் என  உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் கலை அறிவியல் மற்றும் பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் திடீரென மாணவர்களுக்கான கட்டணங்களை எப்படி மொத்தமாக செலுத்துவது என கேள்வி எழுப்பியுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுதாத தேர்வுகளுக்கு…  சான்றிதழ்கள் தயாரிக்க வேண்டும் என்று கூறி இப்படி கட்டணங்கள் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் – மிக மிக முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் நிலையில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கும் கருத்தாக… பள்ளி திறப்பு குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது. கொரோனா முடிந்த பிறகு,  பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருந்தும் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் கல்வி காலதாமதம் ஆவதால் இந்த கேள்வி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சந்தோஷமான அறிவிப்பு – இன்று முதல் அமல்

பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் சிதைந்து போய் உள்ளது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக ஏழை மக்கள் பயன்பெறும் தங்க நகை கடனில் தங்க நகைகளின் மதிப்பில் இனி 90% வரையில் கடன் பெறவும் பெற்றுக் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் தோல் கைவினைப் பொருட்கள் விற்பனை வீழ்ச்சி- நிவாரண நிதி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை….!!

கொரோனா ஊரடங்கு காரணமாக தோல், கைவினை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளதால் வாணியம்பாடி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் ஏராளமான தோல் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு கூடங்களும் உள்ளன. இங்கு தயார் செய்யப்படும் பர்ஸ், வேலட் , பெல்ட், சு உள்ளிட்டவை நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பைப் பெற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு ….!!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு மாதவி சாலையைச் சேர்ந்த ஷகிலா பேகம் கடந்த 30ஆம் தேதி தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டில் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இரவு வீடு திரும்பிய ஷகிலா பேகம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய்க்கு ரொக்கப்பணம் வெள்ளிப் பொருட்கள் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்னும் ஒரு மணி நேரத்தில் முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. இந்த சூழலில்தான் இன்று 12 மணிக்கு ரிசர்வ் வங்கி சார்பாக முக்கிய செய்தியாளர் சந்திப்பு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்திற்கு பிறகு இன்று பிற்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது பல முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ….. அதி முக்கிய தகவல் …!!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாநிலங்கள் கல்வி நிலையம் திறப்புகான தேதியை அறிவித்து, முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழகத்திலும் வருகின்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் திறப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பேரதிர்ச்சி அதிர்ச்சி – மேலும் 2 MLAவுக்கு கொரோனா தொற்று …!!

பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. நாடு முழுவதும் வேகமெடுத்து பரவி வரும் கொரோனா வைரஸ் பாமர மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை விட்டுவைக்கவில்லை. மாநில முதல்வர்களும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில,  ஆளுநர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் கொரோனவால் உயிரிழந்த நிலவும் நாடு முழுவதும் அரங்கேறியுள்ளது. இந்த நிலை தமிழகத்திலும் தொடர்கின்றது. தமிழக ஆளுநர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10ஆம் தேதி முதல் – முதல்வர் அதிரடி அனுமதி

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அனுமதி அளித்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 வயதுக்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுக்கும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் உடற்பயிற்சி நிலையங்கள் இயங்குவதற்கான அனுமதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி இருக்கின்றார். […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று அனுமதி இல்லை – அதிரடி உத்தரவு 

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளோடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தது. இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்த கட்டுப்பாடுகள் இதில் தளர்த்தப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு ஏற்கனவே சுற்றைக்கை வழங்கியிருந்தது. அதன்படி நாடு முழுவதும் கடந்த ஊரடங்கு வரை தடை விதிக்கப்பட்டு இருந்த […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்பில் புது சிக்கல்…. பீதியில் பெற்றோர்கள், மாணவர்கள் …!!

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த திட்டமிட்டு அட்டவணைப் படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதால் சில சாதக, பாதகமான அம்சங்கள் ஏற்படுகின்றன. ஆன்லைன் கல்வி மூலமாக ஹேக்கர்கள் மாணவர்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். டேப்லெட், லேப்டாப், செல்போன் ஆகியவற்றில் பயன்படுத்தி வீட்டில் இருந்து மாணவர்கள் கல்வி கற்கும் போதும், வகுப்புகளை கவனிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக போட்ட வழக்கு…. தமிழக அரசுக்கு கெடு …. ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எத்தனை பேருக்கு நடத்தப்பட்டுள்ளது ? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ? பலியானவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வந்தாலும்,  அதில் முழுமையாக தகவல் இல்லை. முழுமையான தகவலை வெளியிடாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மதுரையில் ஜூலை மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தொடங்கி கொரோனவை  கட்டுப்படுத்த அரசு […]

Categories
அரசியல்

தமிழக்தில் பேருந்து இயக்கம், பள்ளிகள் திறப்பு – அதிரடி முடிவு

கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் இருந்து வருவது தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகம் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக இருக்கும் தமிழகம்,  அதிகமானோரை குணப்படுத்தி அசத்தியுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், தமிழ்நாட்டின் முழு ஊரடங்கு தேவை இல்லை என்றும், போக்குவரத்தை அனுமதிக்கலாம் எனவும் ஐ.எம்.ஏ., தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும் பள்ளிகளை திறக்க […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் கட்டாயம் – மத்திய அதிரடி உத்தரவு …!!

கொரோனா வைரஸ் கடந்த 5 மாதங்களாக இந்தியாவை சூறையாடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு பணிகளை, மாநில அரசுடன் ஒருங்கிணைத்து முன்னெடுத்து வருகின்றன. இதனிடையே நாடு முழுவதும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில தளர்வுகள் விதித்து மத்திய அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் தளர்வுகளை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்ற வழிமுறைகளையும் வழங்கி இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை முதல் யோகா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் செண்டு பூக்கள் விலை வீழ்ச்சி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கால் சாமந்திப் பூவிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்கானிருப்பு கிராமத்தில் சடையன் காடு, சல்லிக்குளம், நாட்டான் காடு உள்ளிட்ட இடங்களில், சுமார் 700 ஏக்கரில் செண்டு  பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் பூக்கள் பூக்க துவங்கி உள்ள நிலையில், ஊரடங்கால் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ சாமந்தி பூ […]

Categories
அரசியல்

இன்று காலை முதல் அமல் – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி …!!

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தை அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது.  அதில் கடந்த பொதுமுடக்கத்தில் இருந்த சிலவற்றிற்கு தளர்வுகள் அனுமதித்துள்ள மத்திய அரசு…  மாநிலங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற அனுமதியும் வழங்கி உள்ளது. அந்த வகையில் இன்று  முதல் இரவு 7 மணி வரை சென்னையில் ஓட்டலில் அமர்ந்து சாப்பிடும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 8-ந் தேதி முதல் – மத்திய அரசு அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 5 மாதங்கள் வரை நீட்டிப்பு, தளர்வு என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து வருகின்றது. இந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில் மத்திய அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை, தடுப்பு, சுகாதார பணிகளை செய்து வருகின்றது, மாநில அரசுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பிற நாடுகளில் சிக்கியிருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தீரன் சின்னமலையின் 215 வது நினைவு நாள்…!!!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 215 வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் தீரன் சின்னமலையின் சிலைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியில் அமைச்சர்கள்  எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் பட்டுப்போன பட்டு விவசாய தொழில் ….!!

ஆசியாவின்  இரண்டாவது மிகப்பெரிய பட்டுக்கூடு அங்காடி ஆக விளங்கிவரும் தர்மபுரி மாவட்டத்தில் பட்டு  விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் வெண் பட்டுக் கூடுகளை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்கி வருகிறது. அங்கிருந்து பெருமளவில் வெண் பட்டுக்கூடுகள்  இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பட்டுக்கூடு இறக்குமதி தடைபட்டதால், இந்தியாவில் பட்டுக்கூடு விலை அதிகரித்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு ….!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவலை குறைக்கும் வகையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை காலை 6 மணி வரை அமுலில் […]

Categories
அரசியல்

தமிழக்தில் அனைத்து மாவட்டத்திலும் – அமைச்சர் அறிவிப்பு ..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு சிகிச்சையில் தமிழக அரசாங்கம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சிறப்பாகவே செய்து வருகிறது. அதிகம் தொற்று கொண்ட மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகம்… அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் நல்ல நிலையை பெற்றுள்ளது. மருத்துவமனையில் குறைந்த அளவு கொரோனா நோயாளிகளே சிகிச்சை பெற்றுவருகின்றார்கள் என்ற நிலை பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தெரியவந்துள்ளது. தமிழக்தில் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கொடுத்ததன் பலனாகத்தான் அதிகமானோரை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்து […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு – அதிரடி தகவல்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து, ஏறக்குறைய ஐந்து மாதங்களாக முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா  குறைந்த பிறகு தான் பள்ளி கல்லூரிகள் திறக்கும் சூழல் உருவாகி உள்ளதால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பு பாதிப்பின் தன்மை பொறுத்து மாநில அரசாங்கங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

வீடுகளிலேயே ஆடிப்பெருக்‍கை கொண்டாட தயாராகும் பெண்கள் …!!

ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால்  காவிரி ஆற்றில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை போலவே ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு விழ வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் புதுமண தம்பதிகள் நீர் நிலைகளில் புனித நீராடி வழிபாடு செய்து பெரியோரிடம் ஆசி பெறுவார்கள். ஆடி பதினெட்டாம் நாளான இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ்  ஊரடங்கு […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.. மாநில அரசுகள் பாதிப்பு பகுதிகளின் தன்மையை பொறுத்து இந்த முடிவினை எடுத்து கொள்ளலாம் என்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இதை பின்பற்றியே தமிழக அரசும் ஊரடங்கு, கட்டுப்பாடு விதித்துள்ளது. அதே நேரத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை பொறுத்து அந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தொகை நோய் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக […]

Categories
அரசியல்

ஒரு நாள் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு – முக்கிய அறிவிப்பு ..!!

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான அறிவிப்புகளும், உத்தரவுகளும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் நாளை தளர்வின்றி முழுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாளை பால் வினியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், குறைந்த அளவிலான பெட்ரோல் பங்க்கில் […]

Categories
மாநில செய்திகள்

வரலட்சுமி நோன்பு உற்சாகமாக கொண்டாடப்பட்டது…!!

தமிழகத்தில் கொரோனா  காலத்திலும் வரலட்சுமி நோன்பு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வரலட்சுமி நோன்பு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் வரலட்சுமி நோன்பு பெண்கள் விரதம் இருந்து பாலி பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து மகிழ்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் எளிமையாக நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி எஸ்ம் பாபு என்பவர் வீட்டில் வரலட்சுமி நோன்பு உற்சாகமாக […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு: திசை திரும்பிய ஆட்டோ… மாற்று தொழிலை தேடும் அவலம்….!!

கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆட்டோக்களில் சவாரி கிடைக்காததால் ஆட்டோ டிரைவர்கள் காய்கறி விற்கும் தொழில் செய்ய தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அதிகரித்துள்ளனர். இதனால் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன. மக்களும் கொரோனா வைரஸ் பயத்தால் வெளியில் செல்லாமல் வீடுகளில் இருப்பதால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்கியுள்ளது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு போதிய சவாரி கிடைக்காததால் வருமானம் இன்றி தவிக்கின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்காலிகமாக வேறு தொழில் செய்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….! ”இனி 5 பேர் தான்” ஆகஸ்ட் 31 வரை அதிரடி உத்தரவு …!!

நாடு முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும் மாநில அளவில் கொரோனா தாக்கம் குறித்து அந்த மாநிலமே முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்து இருந்தது. குறிப்பாக மத்திய அரசு… யோகா, உடற்பயிற்சி கூடம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழக அரசு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆடி 18 அன்று இந்த தவறை செய்யாதிங்க…. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை

ஆடி18ஐ முன்னிட்டு காவிரி நதிக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கோவில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன . இந்தப் பகுதிகளில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதியன்று கரூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், புதுமண தம்பதிகள் அனைவரும் ஒன்றாக கூடி […]

Categories
கடலூர் சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடல் : மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து பாடம்…!!

பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இரண்டு அரசு ஆசிரியைகள் மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்த சமூக இடைவெளியுடன் பாடங்கள் கற்பித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூட குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சிகள் மூலம் கல்வி வீடியோ பாடல்களை ஒளிபரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே புளியம்பேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து பெற்றோர் ஒதுக்கித் தரும் இடத்தில், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று முதல்….. வெளியான அறிவிப்பு …!!

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழுமுடக்கம் அமலுக்கு வந்தது.  கடந்த ஊரடங்கில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தன. ஆனாலும் மாநில அரசு நிலைமையை பொறுத்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து தமிழக அரசும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்தவகையில் தமிழகத்தில்… இன்று நள்ளிரவு 12 […]

Categories
அரசியல்

தென் மாவட்டங்களில் 7ஆம் தேதி – சாட்டையை எடுத்த முதலவர் …!!

தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கொரோனா தாண்டவமாடுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் அமுலில் இருக்கிறது. தமிழகத்திலும் இதற்கான பல்வேறு அறிவிப்புகள் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பணிகளை விரைவு படுத்திய முதல்வர் அடுத்த  தென் மாவட்டங்களில்கொரோனா தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 15வரை ரத்து – உத்தரவு போட்ட மத்திய அரசு …!!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலில் இருக்கும் என இரண்டு தினங்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற விஷயத்தை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்படும் இந்த […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் – அதிரடி அறிவிப்பு 

கொரோனா தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நாடுமுழுவதும் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் கல்வி கற்பதை போல இந்தியாவும் இணைய கல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தமிழகமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இணையவழி கல்வி குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழலில்தான் தமிழக அரசு பள்ளிகளிலும் இணையதளம் வகுப்புக்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், மாணவர்கள் பாடங்களை கற்பதற்காக 297 காணொளிகள் தயார் நிலையில் உள்ளது என […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஆகஸ்ட் 31 வரை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு …!!

இந்தியாவில் இன்று முதல் ஊரடங்கு மூன்றாம் கட்ட தளர்வு அமலாக்கி உள்ளது. வருகின்ற 31ம் தேதி வரை இந்த அறிவிப்பு தொடரும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் இதில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு தளர்வு வழங்கி உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் இரவு நேரம் நடமாட இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இந்தியர்களை மீட்க சிறப்பு விமான சேவை தொடரும் தெரிவித்திருந்த மத்திய அமைச்சகம் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வேலையிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள் : வாழ்வாதாரத்திற்காக விவசாய பணியில் களமிறங்கினர்….!!

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள், பட்டதாரிகளும் விவசாய பணியில் களம் இறங்கியுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். பணிக்கு செல்ல முடியாத பலர் வாழ்க்கையைக் கடத்த வேண்டும் என்பதற்காக மாற்று வேலையை தேடி செல்லும் நிலையும் உருவாகியுள்ளது. அவ்வகையில் நாகர்கோவிலில் ஊரடங்கால் வாழ்வாதாரம்  இழந்த  தனியார் நிறுவன ஊழியர்களும், பட்டதாரிகளும் விவசாய பணியில் களம் இறங்கியுள்ளனர். நாகர்கோவில்அருகே […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஷாக்…. மத்திய அரசு சொல்லிடுச்சு…. காத்திருக்கும் லட்சக்கணக்கானோர் …!!

பல்கலைக்கழக தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிராமண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு முழுவதிலும் மாணவர்களிடம் இருந்து […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை 9.30 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள்  இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை ஒன்பது […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று கடைசி – மிக முக்கிய அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர் . மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை பொது மக்களுக்கு சாதகமான முடிவுகளாக அறிவித்து வருகின்றது. மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளும் அரசை நோக்கி வைக்கப்பட்டு வந்தன,  பொதுமுடக்காத்தால் மக்களுக்கு தேவையான சாதகமாக ஒவ்வொரு விதத்தில் நடவடிக்கையும் அரசு காற்று வருகின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான மோட்டார் வாகன வரி செலுத்த ஜூலை 31ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 5-ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் உணவகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இம்மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு  உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில்கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மாநில […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி இறுதி தேர்வு – யுஜிசி முக்கிய முடிவு …!!

இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு […]

Categories
அரசியல்

ஆகஸ்ட் 31 வரை….. இதற்கெல்லாம் தொடர் தடை…. தமிழக அரசு அறிவிப்பு….!!

ஆகஸ்ட் 31 வரை விதிக்கப்பட்ட ஊராடங்கில் எவற்றுக்கெல்லாம் தடை என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் ஒரே வழி என்பதால், கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூலை 31 க்குப் பிறகு தமிழகத்தில் ஆகஸ்ட் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் – முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நாளை பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவருடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தற்போது மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தேதி வரை பொதுமக்கள் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய உத்தரவு – இனி அனுமதி தேவையில்லை …!!

புதிய வகை கரோனா வைரஸ் பரவலின் மத்தியில் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தின் (Lockdown) கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தனது மூன்றாவது திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். புதிய வழிகாட்டுதலின் கீழ், கோவிட் -19 பரவுவதை எதிர்த்து நாட்டில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் நீக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. அதன்படி, சுதந்திர […]

Categories
அரசியல்

தமிழகத்தில் முக்கிய முடிவு…. எதிர்பார்ப்பில் மக்கள்…. எடப்பாடி அதிரடி ….!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ வல்லுநர் குழுவினரோடு ஆலோசனை நடத்த இருக்கின்றார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. அதனை ஒட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன ? மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எந்த மாதிரியாக உள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் நேற்று கேட்டறிந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மாணவர்கள் மகிழ்ச்சி… மத்திய அரசு அதிரடி முடிவு…..!!

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் ஒரு மாதத்திற்கு இயங்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா கால பொதுமக்கள் அமலில் இருந்து வருகிறது. வருகின்ற 31ம் தேதியோடு பொதுமுடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. ”மக்கள் நடமாட அனுமதி”….. தடை அதிரடி நீக்கம் …!!

கொரோனா பேரிடர் கடந்த 5 மாதங்களாக ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனாவில் தாக்கமும், கொரோனாவில் வேகமும் பிற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த சமயத்தில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் தற்போது இருக்கும் பொது முடக்கம் வருகின்ற 31ம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 31வரை பள்ளி, கல்லூரிக்கு தடை – மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் கொரோனா கால பொதுமக்கள் அமலில் இருந்து வருகிறது. வருகின்ற 31ம் தேதியோடு பொதுமுடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல பள்ளி கல்லூரிகள் 31ம் தேதி வரை இயங்கு வதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. சர்வதேச விமானங்களுக்கு […]

Categories

Tech |