இனி கிராமசபை கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராமசபை கூட்டம் நடைபெறும். கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் கிராமத்திலுள்ள வாக்காளர்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராவார். சட்டமன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராமசபை சட்டத்திற்கு உண்டு. […]
